×
النساءவசனம் 114

அல்-முக்தஸர்

لَّا خَيْرَ فِى كَثِيرٍ مِّن نَّجْوَىٰهُمْ إِلَّا مَنْ أَمَرَ بِصَدَقَةٍ أَوْ مَعْرُوفٍ أَوْ إِصْلَـٰحٍۭ بَيْنَ ٱلنَّاسِ ۚ وَمَن يَفْعَلْ ذَٰلِكَ ٱبْتِغَآءَ مَرْضَاتِ ٱللَّهِ فَسَوْفَ نُؤْتِيهِ أَجْرًا عَظِيمًا ﴿١١٤﴾

அவர்கள் இரகசியமாகப் பேசும் பெரும்பாலான விஷயங்களில் எந்த நன்மையும் பயனும் இல்லை. ஆயினும் அவர்களின் பேச்சுகள் தர்மம் செய்யத் தூண்டுதல் அல்லது மார்க்கமும் அறிவும் கூறும் நல்ல விஷயங்களைச் செய்யத் தூண்டுதல் அல்லது முரண்பட்டவர்களிடையே சமாதானத்திற்கான அழைப்பு விடுத்தல் ஆகியவற்றிற்காக இருந்தாலே தவிர. அல்லாஹ்வின் திருப்தியை நாடி இவ்வாறு செய்பவர்களுக்கு விரைவில் நாம் பெரும் நன்மைகளை வழங்கிடுவோம்.