அல்-முக்தஸர்
وَلَأُضِلَّنَّهُمْ وَلَأُمَنِّيَنَّهُمْ وَلَـَٔامُرَنَّهُمْ فَلَيُبَتِّكُنَّ ءَاذَانَ ٱلْأَنْعَـٰمِ وَلَـَٔامُرَنَّهُمْ فَلَيُغَيِّرُنَّ خَلْقَ ٱللَّهِ ۚ وَمَن يَتَّخِذِ ٱلشَّيْطَـٰنَ وَلِيًّا مِّن دُونِ ٱللَّهِ فَقَدْ خَسِرَ خُسْرَانًا مُّبِينًا ﴿١١٩﴾
உன் நேரான வழியைவிட்டும் அவர்களைத் தடுத்திடுவேன். அவர்களின் வழிகேடுகளை அவர்களுக்கு அலங்கரித்துக் காட்டும் பொய்யான வாக்குறுதிகளின் மூலம் அவர்களுக்கு ஆசைவார்த்தைகளை கூறுவேன். அல்லாஹ் அனுமதித்ததை தடைசெய்வதற்காக அவர்களுடைய கால்நடைகளின் காதுகளை அறுக்குமாறு கட்டளையிடுவேன். அல்லாஹ்வின் படைப்பையும் அதன் இயல்பையும் மாற்றுமாறு அவர்களுக்குக் கட்டளையிடுவேன்.” விரட்டப்பட்ட ஷைத்தானை தான் கட்டுப்படும் நேசிக்கும் தோழனாக ஆக்கிக்கொண்டவர் தெளிவான இழப்பிற்கு உள்ளாகிவிட்டார்.