அல்-முக்தஸர்
وَمَنْ أَحْسَنُ دِينًا مِّمَّنْ أَسْلَمَ وَجْهَهُۥ لِلَّهِ وَهُوَ مُحْسِنٌ وَٱتَّبَعَ مِلَّةَ إِبْرَٰهِيمَ حَنِيفًا ۗ وَٱتَّخَذَ ٱللَّهُ إِبْرَٰهِيمَ خَلِيلًا ﴿١٢٥﴾
வெளிப்படையாகவும் அந்தரங்கமாகவும் அல்லாஹ் விதித்தவற்றைப் பின்பற்றி, தூய்மையான எண்ணம் வைத்து, நற்செயல் புரிந்து இணைவைப்பையும் நிராகரிப்பையும் விட்டு முற்றிலும் நீங்கி, முஹம்மத் (ஸல்) அவர்களது மார்க்கத்தின் மூலமான இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுபவரை விட சிறந்த மார்க்கத்தையுடையவர் வேறு யாரும் இல்லை. தனது பூரண அன்புக்குரியவராக இப்ராஹீம் (அலை) அவர்களை தனது படைப்பினங்களிலிருந்து தேர்ந்தெடுத்துக்கொண்டான்.