×
النساءவசனம் 131

அல்-முக்தஸர்

وَلِلَّهِ مَا فِى ٱلسَّمَـٰوَٰتِ وَمَا فِى ٱلْأَرْضِ ۗ وَلَقَدْ وَصَّيْنَا ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْكِتَـٰبَ مِن قَبْلِكُمْ وَإِيَّاكُمْ أَنِ ٱتَّقُوا۟ ٱللَّهَ ۚ وَإِن تَكْفُرُوا۟ فَإِنَّ لِلَّهِ مَا فِى ٱلسَّمَـٰوَٰتِ وَمَا فِى ٱلْأَرْضِ ۚ وَكَانَ ٱللَّهُ غَنِيًّا حَمِيدًا ﴿١٣١﴾

வானங்களிலும் பூமியிலும் உள்ளவை, அவையிரண்டிற்கு இடையிலுள்ளவையின் ஆட்சியதிகாரம் அவனுக்கே உரியது. வேதம் வழங்கப்பட்ட யூதர்களிடமும் கிருஸ்தவர்களிடமும் உங்களிடமும் நாம் வாக்குறுதி வாங்கினோம். அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகியிருங்கள் என்று. நீங்கள் இந்த வாக்குறுதிக்கு மாறாகச் செயல்பட்டால் உங்களுக்கு நீங்களேதான் தீங்கிழைத்துக் கொள்கிறீர்கள். உங்களின் கீழ்ப்படிதலைவிட்டும் அல்லாஹ் தேவையற்றவன். வானங்களிலும் பூமியிலும் உள்ளவற்றின் ஆட்சியதிகாரம் அவனுக்கே உரியது. அவன் படைப்புகள் அனைவரையும்விட்டு தேவையற்றவன். தன் அனைத்துப் பண்புகளுக்காகவும் செயல்களுக்காகவும் புகப்படுபவன்.