×
النساءவசனம் 140

அல்-முக்தஸர்

وَقَدْ نَزَّلَ عَلَيْكُمْ فِى ٱلْكِتَـٰبِ أَنْ إِذَا سَمِعْتُمْ ءَايَـٰتِ ٱللَّهِ يُكْفَرُ بِهَا وَيُسْتَهْزَأُ بِهَا فَلَا تَقْعُدُوا۟ مَعَهُمْ حَتَّىٰ يَخُوضُوا۟ فِى حَدِيثٍ غَيْرِهِۦٓ ۚ إِنَّكُمْ إِذًا مِّثْلُهُمْ ۗ إِنَّ ٱللَّهَ جَامِعُ ٱلْمُنَـٰفِقِينَ وَٱلْكَـٰفِرِينَ فِى جَهَنَّمَ جَمِيعًا ﴿١٤٠﴾

நம்பிக்கையாளர்களே! அல்லாஹ் குர்ஆனில் உங்களுக்குப் பின்வரும் விஷயத்தை இறக்கியுள்ளான்: நீங்கள் ஒரு அவையில் இருக்கும்போது அல்லாஹ்வின் வசனங்கள் நிராகரிக்கப்படுவதையும் கேலி செய்யப்படுவதையும் செவியுற்றால் அந்த அவையைவிட்டு வெளியேறிவிடுங்கள். அவர்கள் வேறு பேச்சில் ஈடுபடும்வரை அங்கு அமர்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டதல்ல. அதனைச் செவியுற்ற பிறகும் நீங்கள் அங்கு அமர்ந்திருந்தால் அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறாகச் செயல்படுவதில் நீங்களும் அவர்களைப் போன்றவர்கள்தாம். ஏனெனில் அவர்கள் தமது நிராகரிப்பின் மூலம் மாறுசெய்ததைப்போன்று அவர்களுடன் சேர்ந்து அமர்ந்ததின் மூலம் நீங்கள் மாற்றம்செய்துவிடுகிறீர்கள். இஸ்லாத்தை வெளிப்படுத்தி நயவஞ்சகத்தை மறைத்திருக்கும் நயவஞ்சகர்களையும் நிராகரிப்பாளர்களையும் மறுமைநாளில் நரக நெருப்பில் ஒன்றுசேர்த்திடுவான்.