அல்-முக்தஸர்
إِنَّ ٱلْمُنَـٰفِقِينَ يُخَـٰدِعُونَ ٱللَّهَ وَهُوَ خَـٰدِعُهُمْ وَإِذَا قَامُوٓا۟ إِلَى ٱلصَّلَوٰةِ قَامُوا۟ كُسَالَىٰ يُرَآءُونَ ٱلنَّاسَ وَلَا يَذْكُرُونَ ٱللَّهَ إِلَّا قَلِيلًا ﴿١٤٢﴾
நயவஞ்சகர்கள் இஸ்லாத்தை வெளிப்படுத்தி நிராகரிப்பை மறைத்து அல்லாஹ்வை ஏமாற்ற முனைகிறார்கள். அவன் அவர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்துகிறான். ஏனெனில் அவர்களது நிராகரிப்பைப் பற்றி அறிந்திருந்தும் அவன் இவ்வுலகில் அவர்களின் உயிர்களைப் பாதுகாத்துள்ளான். ஆனால் மறுமையில் அவர்களுக்கு கடுமையான வேதனையைத் தயார்செய்து வைத்துள்ளான். அவர்கள் தொழுகைக்காக வந்தால் சோம்பேறிகளாகவும், வெறுப்போடும் மக்கள் காண வேண்டும் மதிக்க வேண்டும் என்பதற்காகவே வருகிறார்கள். நம்பிக்கையார்களைக் காணும்போது மாத்திரம் சிறிது அல்லாஹ்வை நினைவுகூர்கிறார்கள்.