அல்-முக்தஸர்
وَقَوْلِهِمْ إِنَّا قَتَلْنَا ٱلْمَسِيحَ عِيسَى ٱبْنَ مَرْيَمَ رَسُولَ ٱللَّهِ وَمَا قَتَلُوهُ وَمَا صَلَبُوهُ وَلَـٰكِن شُبِّهَ لَهُمْ ۚ وَإِنَّ ٱلَّذِينَ ٱخْتَلَفُوا۟ فِيهِ لَفِى شَكٍّ مِّنْهُ ۚ مَا لَهُم بِهِۦ مِنْ عِلْمٍ إِلَّا ٱتِّبَاعَ ٱلظَّنِّ ۚ وَمَا قَتَلُوهُ يَقِينًۢا ﴿١٥٧﴾
நாங்கள்தாம் அல்லாஹ்வின் தூதரான மர்யமின் மகன் ஈஸாவைக் கொலைசெய்தோம் என்று பெருமையாகக் கூறியதனாலும் நாம் அவர்களைச் சபித்துவிட்டோம். அவர்கள் கூறுவதுபோல, அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை; சிலுவையில் அறையவுமில்லை. ஈஸாவின் தோற்றத்தை அல்லாஹ் வழங்கிய வேறொரு மனிதரையே அவர்கள் கொன்று சிலுவையில் அறைந்தார்கள். ஈஸாதான் கொல்லப்பட்டவர் என்று எண்ணிக்கொண்டார்கள். அவரை நாங்கள்தாம் கொன்றோம் என்று கூறிய யூதர்களும் ஈஸாவை அவர்களிடம் ஒப்படைத்த கிருஸ்தவர்களும் ஈஸாவின் விஷயத்தில் கடுமையான சந்தேகத்திலும் தடுமாற்றத்திலும் இருக்கிறார்கள். அவர்களுக்கு இது குறித்து எந்த அறிவும் இல்லை. அவர்கள் வெற்று யூகங்களையே பின்பற்றுகிறார்கள். சத்திய விஷயத்தில் யூகம் எந்தப் பயனையும் அளிக்காது. உறுதியாக அவர்கள் ஈஸாவைக் கொல்லவுமில்லை; சிலுவையில் அறையவுமில்லை.