அல்-முக்தஸர்
إِنَّمَا ٱلتَّوْبَةُ عَلَى ٱللَّهِ لِلَّذِينَ يَعْمَلُونَ ٱلسُّوٓءَ بِجَهَـٰلَةٍ ثُمَّ يَتُوبُونَ مِن قَرِيبٍ فَأُو۟لَـٰٓئِكَ يَتُوبُ ٱللَّهُ عَلَيْهِمْ ۗ وَكَانَ ٱللَّهُ عَلِيمًا حَكِيمًا ﴿١٧﴾
பாவங்கள் ஏற்படுத்தும் விளைவுகளை அறியாமல் பாவங்களில் ஈடுபட்டு - மனிதன் அறிந்தோ அறியாமலோ செய்யும் பாவங்கள் அனைத்தும் இந்த வகையைச் சார்ந்ததுதான் - பின்னர் தங்கள் இறைவனிடம் மரணவேளை வருவதற்கு முன்னரே திரும்பிவிடுபவர்களது பாவமன்னிப்புக் கோரிக்கையைத்தான் அல்லாஹ் ஏற்றுக் கொள்வான். இவர்களின் குற்றங்குறைகளை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவான். அல்லாஹ் தன் படைப்பினங்களின் நிலைகளைக் குறித்து நன்கறிந்தவன். தனது நிர்ணயத்தில், சட்டங்களில் ஞானம்மிக்கவன்.