அல்-முக்தஸர்
يَـٰٓأَيُّهَا ٱلنَّاسُ قَدْ جَآءَكُمُ ٱلرَّسُولُ بِٱلْحَقِّ مِن رَّبِّكُمْ فَـَٔامِنُوا۟ خَيْرًا لَّكُمْ ۚ وَإِن تَكْفُرُوا۟ فَإِنَّ لِلَّهِ مَا فِى ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ ۚ وَكَانَ ٱللَّهُ عَلِيمًا حَكِيمًا ﴿١٧٠﴾
மனிதர்களே! தூதர் முஹம்மது உங்களிடம் அல்லாஹ்விடமிருந்து நேர்வழியையும் சத்திய மார்க்கத்தையும் கொண்டு வந்துள்ளார். அவர் கொண்டுவந்ததின் மீது நம்பிக்கைகொள்ளுங்கள். அது உங்களுக்கு இவ்வுலகிலும் மறுவுலகிலும் நலவாக அமையும். நீங்கள் அல்லாஹ்வை நிராகரித்தால், உங்களின் நிராகரிப்பு அவனுக்கு எந்தத் தீங்கையும் ஏற்படுத்திவிடாது. அவன் உங்களின் ஈமானைவிட்டும் தேவையற்றவன். வானங்களிலும் பூமியிலும் அவை இரண்டிற்கிடையிலும் உள்ளவற்றின் ஆட்சியதிகாரம் அவனுக்கே உரியது. நேர்வழிக்குத் தகுதியானவர்களை அவன் அறிந்து அதனை அவர்களுக்கு இலகுபடுத்துபனாகவும். அதற்குத் தகுதியற்றவர்களை அறிந்து அதனை விட்டும் அவர்களைத் திருப்பிவிடுபவனாகவும் இருக்கிறான். சொல்லிலும் செயலிலும் தான் அமைத்த சட்டங்களிலும் நிர்ணயத்திலும் அவன் ஞானமிக்கவன்.