×
النساءவசனம் 19

அல்-முக்தஸர்

يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَا يَحِلُّ لَكُمْ أَن تَرِثُوا۟ ٱلنِّسَآءَ كَرْهًا ۖ وَلَا تَعْضُلُوهُنَّ لِتَذْهَبُوا۟ بِبَعْضِ مَآ ءَاتَيْتُمُوهُنَّ إِلَّآ أَن يَأْتِينَ بِفَـٰحِشَةٍ مُّبَيِّنَةٍ ۚ وَعَاشِرُوهُنَّ بِٱلْمَعْرُوفِ ۚ فَإِن كَرِهْتُمُوهُنَّ فَعَسَىٰٓ أَن تَكْرَهُوا۟ شَيْـًٔا وَيَجْعَلَ ٱللَّهُ فِيهِ خَيْرًا كَثِيرًا ﴿١٩﴾

அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய தூதரைப் பின்பற்றியவர்களே! உங்களின் தந்தையரிடமிருந்து சொத்தை வாரிசாகப் பெறுவதுபோல் அவர்களின் மனைவியரை வாரிசாகப் பெறுவது உங்களுக்கு ஆகுமானதல்ல. அவர்களை நீங்கள் மணமுடித்துக் கொள்வதோ, நீங்கள் விரும்புபவர்களுக்கு மணமுடித்துக் கொடுப்பதோ, அவர்கள் திருமணம் செய்துகொள்வதைத் தடுப்பதோ கூடாது. நீங்கள் வெறுக்கும் உங்கள் மனைவியரை அவர்களுக்கு அளித்த மணக்கொடை மற்றும் ஏனையவற்றை திரும்பப் பெறும் எண்ணத்தில் அவர்களைத் துன்புறுத்துவதற்காகத் தடுத்துவைத்துக் கொள்வதும் உங்களுக்கு ஆகுமானதல்ல. ஆயினும் அவர்கள் பகிரங்கமான விபச்சாரத்தில் ஈடுபட்டாலே தவிர. அவர்கள் அவ்வாறு செய்தால் அவர்களுக்கு நீங்கள் அளித்த மணக்கொடையை திரும்பப் பெறுவதற்காக நெருக்கடியளிப்பதற்காக தடுத்து வைத்துக்கொள்வது உங்கள் மீது குற்றமாகாது. உங்கள் பெண்களுக்கு நோவினை கொடுக்காமலும் உபகாரம் புரிந்தும் நல்லமுறையில் வாழ்க்கை நடத்துங்கள். உலக காரியம் ஒன்றுக்காக நீங்கள் அவர்களை வெறுத்தால் அவர்களைச் சகித்துக்கொள்ளுங்கள். ஏனெனில் நீங்கள் வெறுக்கும் விஷயத்தில் ஏராளமான நன்மைகளை இவ்வுலகிலும் மறுமையிலும் அல்லாஹ் வைத்திருக்கலாம்.