அல்-முக்தஸர்
يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَا تَأْكُلُوٓا۟ أَمْوَٰلَكُم بَيْنَكُم بِٱلْبَـٰطِلِ إِلَّآ أَن تَكُونَ تِجَـٰرَةً عَن تَرَاضٍ مِّنكُمْ ۚ وَلَا تَقْتُلُوٓا۟ أَنفُسَكُمْ ۚ إِنَّ ٱللَّهَ كَانَ بِكُمْ رَحِيمًا ﴿٢٩﴾
அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய தூதரைப் பின்பற்றியவர்களே! உங்களில் ஒருவர் மற்றவரின் பொருளை அபகரித்தல், திருடுதல், இலஞ்சம் பெறுதல் போன்ற தவறான முறையில் எடுத்துக்கொள்ள வேண்டாம். ஆயினும் நீங்கள் ஒருவருக்கொருவர் இணக்கத்துடன் அளிக்கும் வியாபாரப் பொருள்களைத்தவிர. அவற்றை உண்பதும் பயன்படுத்திக் கொள்வதும் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. ஒருவர் மற்றவரைக் கொலை செய்யாதீர்கள். தம்மைத் தாமே கொலை செய்து உங்களை அழிவில் போட்டுக்கொள்ளாதீர். அல்லாஹ் உங்களின் விஷயத்தில் மிகுந்த கருணையாளனாக இருக்கின்றான். உங்களின் உயிர்களையும் செல்வங்களையும் மானங்களையும் கண்ணியப்படுத்தியதும் அவனது கருணையின் வெளிப்பாடுதான்.