×
النساءவசனம் 35

அல்-முக்தஸர்

وَإِنْ خِفْتُمْ شِقَاقَ بَيْنِهِمَا فَٱبْعَثُوا۟ حَكَمًا مِّنْ أَهْلِهِۦ وَحَكَمًا مِّنْ أَهْلِهَآ إِن يُرِيدَآ إِصْلَـٰحًا يُوَفِّقِ ٱللَّهُ بَيْنَهُمَآ ۗ إِنَّ ٱللَّهَ كَانَ عَلِيمًا خَبِيرًا ﴿٣٥﴾

தம்பதியினரின் பொறுப்பாளர்களே! கணவன், மனைவிக்கிடையே உள்ள கருத்து வேறுபாடு பகைமைக்கு இட்டுச்செல்லும் என்று நீங்கள் அஞ்சினால் கணவனின் குடும்பத்திலிருந்து நேர்மையான ஒருவரையும் மனைவியின் குடும்பத்திலிருந்து நேர்மையான ஒருவரையும் நடுவர்களாக நியமனம் செய்யுங்கள். இருவரும் சேர்ந்துவாழ்வது சிறந்ததா அல்லது பிரிந்துவிடுவதா? என அந்த நடுவர்கள் முடிவுசெய்யட்டும். சேர்ந்து வாழ்வதே விருப்பத்திற்குரியதும் சிறந்ததுமாகும். நடுவர்கள், அவ்விருவரும் சேர்ந்து வாழ்வதை விரும்பி அதற்குரிய சிறந்த வழிமுறையையும் கடைபிடித்தால் அல்லாஹ் அந்த கணவன் மனைவிக்கு இடையே இணக்கத்தை ஏற்படுத்திவிடுவான். அவ்விருவருக்கும் மத்தியிலுள்ள கருத்து வேறுபாடு நீங்கிவிடும். தன் அடியார்கள் செய்யும் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவர்களின் உள்ளங்களில் மறைத்து வைத்திருக்கும் நுணுக்கமானவற்றையும் அவன் நன்கறிந்தவன்.