அல்-முக்தஸர்
ٱلَّذِينَ يَبْخَلُونَ وَيَأْمُرُونَ ٱلنَّاسَ بِٱلْبُخْلِ وَيَكْتُمُونَ مَآ ءَاتَىٰهُمُ ٱللَّهُ مِن فَضْلِهِۦ ۗ وَأَعْتَدْنَا لِلْكَـٰفِرِينَ عَذَابًا مُّهِينًا ﴿٣٧﴾
அல்லாஹ் தங்களுக்கு வழங்கியவற்றில் அவன் கடமையாக்கியதைச் செலவுசெய்யாமல் கஞ்சத்தனம் செய்பவர்கள், தமது சொல்லாலும் செயலாலும் பிற மக்களையும் கஞ்சத்தனம் செய்யத் தூண்டுபவர்கள், அல்லாஹ் தங்களுக்கு வழங்கிய வாழ்வாதாரத்தையும், அறிவையும் இன்னபிற விஷயங்களையும் மறைப்பவர்கள், மக்களிடம் சத்தியத்தை வெளிப்படுத்தாமல் அதனை மறைத்து அசத்தியத்தை வெளிப்படுத்துவோர் ஆகியோரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை. இவைகள் நிராகரிப்பின் தன்மைகளாகும். இத்தகைய நிராகரிப்பாளர்களுக்கு நாம் இழிவுதரும் வேதனையைத் தயார்படுத்தி வைத்துள்ளோம்.