×
النساءவசனம் 42

அல்-முக்தஸர்

يَوْمَئِذٍ يَوَدُّ ٱلَّذِينَ كَفَرُوا۟ وَعَصَوُا۟ ٱلرَّسُولَ لَوْ تُسَوَّىٰ بِهِمُ ٱلْأَرْضُ وَلَا يَكْتُمُونَ ٱللَّهَ حَدِيثًا ﴿٤٢﴾

அந்த மகத்தான நாளில் அல்லாஹ்வை நிராகரித்து தூதருக்கு மாறுசெய்தவர்கள் தாங்கள் மண்ணோடு மண்ணாக பூமியோடு சங்கமமாகி விடக்கூடாதா என்று ஏங்குவார்கள். அவர்கள் செய்த எதனையும் அல்லாஹ்வைவிட்டும் அவர்களால் மறைக்க முடியாது. ஏனெனில் அல்லாஹ் அவர்களின் நாவுகளுக்கு முத்திரையிட்டுவிடுவான். எனவே அவற்றால் பேச முடியாது. உறுப்புகளுக்கு பேசவதற்கு அனுமதியளிப்பான். எனவே அவை அவர்களுக்கெதிராக அவர்களது செயல்களைப் பற்றி சாட்சிகூறும்.