×
النساءவசனம் 49

அல்-முக்தஸர்

أَلَمْ تَرَ إِلَى ٱلَّذِينَ يُزَكُّونَ أَنفُسَهُم ۚ بَلِ ٱللَّهُ يُزَكِّى مَن يَشَآءُ وَلَا يُظْلَمُونَ فَتِيلًا ﴿٤٩﴾

தூதரே! தங்களையும் தங்களின் செயல்களையும் பரிசுத்தப்படுத்தும் விதத்தில் புகழ்ந்து கொள்கிறார்களே அவர்களை உமக்குத் தெரியுமா? மாறாக அல்லாஹ் மட்டுமே தன் அடியார்களில் தான் நாடியவர்களைப் புகழ்ந்து பரிசுத்தப்படுத்துபவன். ஏனெனில் அவன்தான் உள்ளங்களின் இரகசியங்களை அறிந்தவன். அவர்கள் செய்த நன்மை பேரீச்சம் விதையில் இருக்கும் நூலளவு இருந்தாலும் அதுவும் அவர்களுக்குக் குறைக்கப்படமாட்டாது.