×
النساءவசனம் 5

அல்-முக்தஸர்

وَلَا تُؤْتُوا۟ ٱلسُّفَهَآءَ أَمْوَٰلَكُمُ ٱلَّتِى جَعَلَ ٱللَّهُ لَكُمْ قِيَـٰمًا وَٱرْزُقُوهُمْ فِيهَا وَٱكْسُوهُمْ وَقُولُوا۟ لَهُمْ قَوْلًا مَّعْرُوفًا ﴿٥﴾

பொறுப்பாளர்களே! உங்கள்வசம் ஒப்படைக்கப்பட்டிக்கும் செல்வங்களை அதனைச் சரியாக பராமரிக்கத் தெரியாதவர்களிடம் வழங்காதீர்கள். இந்த செல்வங்களை அல்லாஹ் அடியார்களின் நன்மைக்காகவும் வாழ்வாதாரத்துக்காகவும் ஏற்படுத்தியுள்ளான். இப்படிப்பட்டவர்கள் சொத்துக்களைப் பாதுகாக்கத் தகுதியானவர்கள் அல்ல. அவற்றிலிருந்து அவர்களுக்கு செலவுசெய்யுங்கள், ஆடை வழங்குங்கள். அவர்களிடம் நல்ல வார்த்தையைக் கூறுங்கள். “நீங்கள் பக்குவ வயதை, பராமரிக்கும் தகுதியை அடைந்துவிட்டால் நாங்கள் உங்களிடம் ஒப்படைத்துவிடுவோம்” என்பது போன்ற அழகிய வாக்குறுதிகளைக் கூறுங்கள்.