×
النساءவசனம் 57

அல்-முக்தஸர்

وَٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّـٰلِحَـٰتِ سَنُدْخِلُهُمْ جَنَّـٰتٍ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَـٰرُ خَـٰلِدِينَ فِيهَآ أَبَدًا ۖ لَّهُمْ فِيهَآ أَزْوَٰجٌ مُّطَهَّرَةٌ ۖ وَنُدْخِلُهُمْ ظِلًّا ظَلِيلًا ﴿٥٧﴾

அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய தூதர்களைப் பின்பற்றி நற்செயல்கள் புரிந்தவர்களை மறுமைநாளில் நாம் சுவனங்களில் பிரவேசிக்கச் செய்வோம். அவற்றின் மாளிகைகளுக்குக் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். அங்கு அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். அந்த சுவனங்களில் அவர்களுக்கு எல்லாவித அசுத்தங்களிலிருந்தும் தூய்மையான மனைவியரும் உண்டு. வெப்பமும் குளிர்ச்சியும் அற்ற அடர்த்தியான நீண்ட நிழல்களில் நாம் அவர்களை பிரவேசிக்கச் செய்வோம்.