×
النساءவசனம் 64

அல்-முக்தஸர்

وَمَآ أَرْسَلْنَا مِن رَّسُولٍ إِلَّا لِيُطَاعَ بِإِذْنِ ٱللَّهِ ۚ وَلَوْ أَنَّهُمْ إِذ ظَّلَمُوٓا۟ أَنفُسَهُمْ جَآءُوكَ فَٱسْتَغْفَرُوا۟ ٱللَّهَ وَٱسْتَغْفَرَ لَهُمُ ٱلرَّسُولُ لَوَجَدُوا۟ ٱللَّهَ تَوَّابًا رَّحِيمًا ﴿٦٤﴾

நாம் தூதர்களை அனுப்பியதெல்லாம் அல்லாஹ்வின் நாட்டத்தையும், அவனின் ஏற்பாட்டையும் கொண்டு அவர் கட்டளையிடும் விஷயங்களில் மக்கள் அவருக்குக் கட்டுப்பட வேண்டும் என்பதற்காகத்தான். அவர்கள் பாவங்கள் செய்து தங்களுக்குத் தாங்களே அநீதி இழைத்த சமயத்தில் - நீர் உயிரோடு இருக்கும்போது - உம்மிடம் வந்து தாங்கள் செய்த பாவங்களை ஒத்துக் கொண்டு கைசேதப்பட்டு திருந்தியவர்களாக அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோரினால், நீரும் அவர்களுக்காக மன்னிப்புக் கோரினால் அவர்கள் அல்லாஹ்வை பெரும் மன்னிப்பாளனாகவும் மிகுந்த கருணையாளனாகவும் கண்டிருப்பார்கள்.