×
النساءவசனம் 66

அல்-முக்தஸர்

وَلَوْ أَنَّا كَتَبْنَا عَلَيْهِمْ أَنِ ٱقْتُلُوٓا۟ أَنفُسَكُمْ أَوِ ٱخْرُجُوا۟ مِن دِيَـٰرِكُم مَّا فَعَلُوهُ إِلَّا قَلِيلٌ مِّنْهُمْ ۖ وَلَوْ أَنَّهُمْ فَعَلُوا۟ مَا يُوعَظُونَ بِهِۦ لَكَانَ خَيْرًا لَّهُمْ وَأَشَدَّ تَثْبِيتًا ﴿٦٦﴾

“நீங்கள் ஒருவரையொருவர் கொன்றுவிடுங்கள் அல்லது உங்களின் வீடுகளிலிருந்து வெளியேறிவிடுங்கள்” என்று நாம் அவர்கள்மீது விதித்திருந்தால் சிலரைத் தவிர மற்றவர்கள் அதனைச் செயல்படுத்தியிருக்க மாட்டார்கள். அவர்களுக்குச் சிரமமானதை அவன் அவர்கள்மீது விதிக்கவில்லை என்பதற்காக அவர்கள் அவனைப் புகழட்டும். அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுமாறு அவர்களுக்குக் கூறப்பட்டதை செயல்படுத்தி இருந்தால் அது மாறுசெய்வதை விட சிறந்ததாகவும் அவர்களது நம்பிக்கையை இன்னும் உறுதிப்படுத்துவதாகவும் இருந்திருக்கும்; நாம் அவர்களுக்கு பெரும் நன்மைகளை வழங்கியிருப்போம்; அல்லாஹ்வின் பக்கமும் அவனது சுவனத்தின் பக்கமும் செல்லக்கூடிய நேரான வழியையும் காட்டியிருப்போம்.