அல்-முக்தஸர்
أَيْنَمَا تَكُونُوا۟ يُدْرِككُّمُ ٱلْمَوْتُ وَلَوْ كُنتُمْ فِى بُرُوجٍ مُّشَيَّدَةٍ ۗ وَإِن تُصِبْهُمْ حَسَنَةٌ يَقُولُوا۟ هَـٰذِهِۦ مِنْ عِندِ ٱللَّهِ ۖ وَإِن تُصِبْهُمْ سَيِّئَةٌ يَقُولُوا۟ هَـٰذِهِۦ مِنْ عِندِكَ ۚ قُلْ كُلٌّ مِّنْ عِندِ ٱللَّهِ ۖ فَمَالِ هَـٰٓؤُلَآءِ ٱلْقَوْمِ لَا يَكَادُونَ يَفْقَهُونَ حَدِيثًا ﴿٧٨﴾
நீங்கள் எங்கிருந்தாலும் உங்களுக்கான தவணை வந்துவிட்டால் மரணம் உங்களை அடைந்தே தீரும், நீங்கள் போர்க்களத்தைவிட்டு வெகுதூரமாக பாதுகாப்பான கோட்டையில் இருந்தாலும் சரியே. இந்த நயவஞ்சகர்களுக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தக்கூடிய அதிகமான வாழ்வாதாரமும் குழந்தைகளும் வழங்கப்பட்டால், “இவை அல்லாஹ்விடமிருந்து கிடைத்தவைதாம்” என்று கூறுகிறார்கள். ஆனால் தங்களின் குழந்தைகளிலோ வாழ்வாதாரத்திலோ துன்பம் ஏற்பட்டுவிட்டால், நபியவர்களினால்தான் இந்த துரதிஷ்டம் ஏற்பட்டது எனக்கருதி “இந்த தீமைகள் உம்மால் ஏற்பட்டதுதான்” என்று கூறுகிறார்கள். தூதரே! அவர்களிடம் நீர் கூறுவீராக: “இன்பங்களும் துன்பங்களும் அல்லாஹ் ஏற்படுத்திய விதிகள்தாம். அனைத்தும் அவனிடமிருந்தே ஏற்பட்டது.” இவ்வாறு பேசும் இந்த மக்களுக்கு ஏன் நீர் கூறும் எதுவும் புரிவதாகத் தெரியவில்லை?.