அல்-முக்தஸர்
وَإِذَا جَآءَهُمْ أَمْرٌ مِّنَ ٱلْأَمْنِ أَوِ ٱلْخَوْفِ أَذَاعُوا۟ بِهِۦ ۖ وَلَوْ رَدُّوهُ إِلَى ٱلرَّسُولِ وَإِلَىٰٓ أُو۟لِى ٱلْأَمْرِ مِنْهُمْ لَعَلِمَهُ ٱلَّذِينَ يَسْتَنۢبِطُونَهُۥ مِنْهُمْ ۗ وَلَوْلَا فَضْلُ ٱللَّهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهُۥ لَٱتَّبَعْتُمُ ٱلشَّيْطَـٰنَ إِلَّا قَلِيلًا ﴿٨٣﴾
முஸ்லிம்களின் அமைதி, மகிழ்ச்சி அல்லது அச்சம், கவலை சம்பந்தமான ஏதாவது ஒரு செய்தி இந்த நயவஞ்சகர்களிடம் வந்தால் அதனைப் பரப்பிவிடுகிறார்கள். அவர்கள் அல்லாஹ்வின் தூதரிடம் அல்லது முஸ்லிம்களின் விவகாரங்களை நிர்ணயிக்கும் பொறுப்புதாரர்கள், அறிவுடையவர்கள், விசுவாசமானவர்களிடம் விஷயத்தை கொண்டு சென்றிருந்தால் ஆராய்ந்தறிவோர் அச்செய்தியை இரகசியமாக வைப்பதா வெளியிடுவதா என்பதை முடிவுசெய்திருப்பார்கள். இறைநம்பிக்கையாளர்களே! இஸ்லாத்தின் மூலம் அல்லாஹ்வின் அருளும் அல்குர்ஆனின் மூலம் அவனது கருணையும் உங்களுக்குக் கிடைத்து இந்த நயவஞ்சகர்களை சோதித்ததை விட்டும் அவன் உங்களைப் பாதுகாத்திருக்காவிட்டால் உங்களில் சிலரைத் தவிர மற்றவர்கள் ஷைத்தானின் ஊசலாட்டங்களைப் பின்பற்றியிருப்பீர்கள்.