அல்-முக்தஸர்
مَّن يَشْفَعْ شَفَـٰعَةً حَسَنَةً يَكُن لَّهُۥ نَصِيبٌ مِّنْهَا ۖ وَمَن يَشْفَعْ شَفَـٰعَةً سَيِّئَةً يَكُن لَّهُۥ كِفْلٌ مِّنْهَا ۗ وَكَانَ ٱللَّهُ عَلَىٰ كُلِّ شَىْءٍ مُّقِيتًا ﴿٨٥﴾
பிறருக்கு நன்மை ஏற்படுவதற்காக யார் முயற்சி செய்வாரோ அவருக்கும் அதன் நன்மையில் பங்கு உண்டு. பிறருக்கு தீங்கு செய்வதற்காக யார் முயற்சி செய்வாரோ அவருக்கும் அந்தப் பாவத்தில் பங்கு உண்டு. மனிதன் செய்யக்கூடிய ஒவ்வொன்றையும் அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான். அவற்றிற்கேற்ப அவன் அவர்களுக்குக் கூலி வழங்குவான். நன்மை நிகழ்வதற்கு நீங்கள் காரணமாக அமைந்தால் அதில் உங்களுக்கும் பங்கு உண்டு. தீமை நிகழ்வதற்கு நீங்கள் காரணமாக அமைந்தால் அதில் உங்களுக்கும் பங்கு உண்டு.