×
المائدةவசனம் 1

அல்-முக்தஸர்

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ أَوْفُوا۟ بِٱلْعُقُودِ ۚ أُحِلَّتْ لَكُم بَهِيمَةُ ٱلْأَنْعَـٰمِ إِلَّا مَا يُتْلَىٰ عَلَيْكُمْ غَيْرَ مُحِلِّى ٱلصَّيْدِ وَأَنتُمْ حُرُمٌ ۗ إِنَّ ٱللَّهَ يَحْكُمُ مَا يُرِيدُ ﴿١﴾

நம்பிக்கை கொண்டோரே! உங்களுக்கும் உங்கள் படைப்பாளனுக்குமிடையே இருக்கும் உறுதியான ஒப்பந்தங்களையும் உங்களுக்கும் ஏனைய அடியார்களுக்குமிடையே செய்துகொண்ட ஒப்பந்தங்களையும் முழுமையாக நிறைவேற்றுங்கள். அல்லாஹ் உங்கள் மீது கருணை செலுத்தும் பொருட்டு ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற கால்நடைகளை உங்களுக்கு ஆகுமாக்கித் தந்துள்ளான். ஆயினும் வசனங்கள் மூலம் குர்ஆனில் உங்களுக்குத் தடைசெய்யப்பட்டவற்றைத் தவிர. ஹஜ் அல்லது உம்ராவுக்காக நீங்கள் இஹ்ராம் அணிந்திருக்கும் போது தரையில் வேட்டையாடுவது உங்களுக்குத் தடைசெய்யப்பட்டுள்ளது. தனது ஞானத்திற்கு ஏற்ப அல்லாஹ் தான் நாடியதை ஹலாலாகவும் ஹராமாகவும் தீர்மானிக்கிறான். அவனை யாரும் நிர்ப்பந்திக்க முடியாது. அவனுடைய தீர்மானத்தை யாரும் ஆட்சேபிக்கவும் முடியாது.