×
المائدةவசனம் 101

அல்-முக்தஸர்

يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَا تَسْـَٔلُوا۟ عَنْ أَشْيَآءَ إِن تُبْدَ لَكُمْ تَسُؤْكُمْ وَإِن تَسْـَٔلُوا۟ عَنْهَا حِينَ يُنَزَّلُ ٱلْقُرْءَانُ تُبْدَ لَكُمْ عَفَا ٱللَّهُ عَنْهَا ۗ وَٱللَّهُ غَفُورٌ حَلِيمٌ ﴿١٠١﴾

அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டவர்களே! உங்களுக்குத் தேவையில்லாத, உங்களின் மார்க்க விவகாரங்களுக்குப் பயனளிக்காத விஷயங்களை உங்கள் தூதரிடம் கேட்காதீர்கள். அவை உங்களுக்கு வெளிப்பட்டால் அவற்றின் சிரமத்தினால் உங்களுக்குக் கவலையே ஏற்படும். உங்கள் தூதருக்கு வஹி இறங்கிக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில் கேட்பதற்குத் தடுக்கப்பட்டவற்றைக் குறித்து நீங்கள் கேட்டால் அவை உங்களுக்குத் தெளிவுபடுத்தப்பட்டுவிடும். இது அல்லாஹ்வுக்கு மிகவும் இலகுவானது. எவற்றைக் குறித்து குர்ஆன் எதுவும் கூறவில்லையோ அவற்றை அல்லாஹ் மன்னித்துவிட்டான். எனவே அவற்றைக் குறித்து கேட்காதீர்கள். நீங்கள் அவை குறித்து கேட்டால் அவற்றைக் குறித்த சட்டங்கள் உங்களுக்குத் இறக்கப்பட்டுவிடும். அடியார்கள் திருந்தும் பட்சத்தில் அவர்களின் பாவங்களை அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும், அவற்றிற்காக தண்டனையளிக்காமல் பொறுமையுடையவனாகவும் இருக்கின்றான்.