×
المائدةவசனம் 113

அல்-முக்தஸர்

قَالُوا۟ نُرِيدُ أَن نَّأْكُلَ مِنْهَا وَتَطْمَئِنَّ قُلُوبُنَا وَنَعْلَمَ أَن قَدْ صَدَقْتَنَا وَنَكُونَ عَلَيْهَا مِنَ ٱلشَّـٰهِدِينَ ﴿١١٣﴾

ஹவாரிய்யீன்கள் ஈஸாவிடம் கூறினார்கள்: “நாங்கள் அந்த உணவுத்தட்டிலிருந்து உண்ணவும் அல்லாஹ்வின் முழுமையான ஆற்றலையும் நீர் அவனது தூதர் என்பதையும் எங்கள் உள்ளங்கள் உணரவும் விரும்புகின்றோம். நீர் அல்லாஹ்விடமிருந்து கொண்டு வந்ததில் உண்மையாளர் என்பதை உறுதியாக அறிந்து, அதனைக் காணாதவர்களிடம் சாட்சி கூறுபவர்களாகவும் இருக்க விரும்புகின்றோம்.”