×
المائدةவசனம் 115

அல்-முக்தஸர்

قَالَ ٱللَّهُ إِنِّى مُنَزِّلُهَا عَلَيْكُمْ ۖ فَمَن يَكْفُرْ بَعْدُ مِنكُمْ فَإِنِّىٓ أُعَذِّبُهُۥ عَذَابًا لَّآ أُعَذِّبُهُۥٓ أَحَدًا مِّنَ ٱلْعَـٰلَمِينَ ﴿١١٥﴾

ஈஸாவின் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக் கொண்டான். அவன் கூறினான்: “நீங்கள் வேண்டிய உணவுத்தட்டை நான் உங்கள் மீது இறக்குவேன். நான் இறக்கிய பிறகு யாரேனும் நிராகரித்தால் அவர் தன்னைத்தானே பழித்துக் கொள்ளட்டும். உலகில் யாருக்கும் வழங்காத கடும் தண்டனையை நான் அவருக்கு வழங்குவேன். ஏனெனில் அவன் தெளிவான சான்றினைக் கண்ட பின்னரும் பிடிவாதத்தினால் அதனை நிராகரித்தான். அல்லாஹ் தன் வாக்குறுதியை நிரூபித்து அவர்கள் மீது உணவுத்தட்டை இறக்கினான்.