×
المائدةவசனம் 20

அல்-முக்தஸர்

وَإِذْ قَالَ مُوسَىٰ لِقَوْمِهِۦ يَـٰقَوْمِ ٱذْكُرُوا۟ نِعْمَةَ ٱللَّهِ عَلَيْكُمْ إِذْ جَعَلَ فِيكُمْ أَنۢبِيَآءَ وَجَعَلَكُم مُّلُوكًا وَءَاتَىٰكُم مَّا لَمْ يُؤْتِ أَحَدًا مِّنَ ٱلْعَـٰلَمِينَ ﴿٢٠﴾

தூதரே! மூஸா இஸ்லாஈலின் சந்ததியான தம் சமூகத்தாரிடம் கூறியதை நினைவுகூருங்கள்: “என் சமூகமே! உங்கள் உள்ளத்தாலும் நாவாலும் அல்லாஹ் உங்கள் மீது பொழிந்த அருட்கொடைகளை நினைவுகூருங்கள். அவன் உங்களிடையே நேர்வழியின் பக்கம் அழைக்கும் தூதர்களை ஏற்படுத்தினான். நீங்கள் அடிமைப்பட்டு ஆளப்படுவோராக இருந்த பின்னர் உங்களை நீங்களே ஆளுவோராக ஆக்கினான். உங்களின் காலகட்டத்தில் யாருக்கும் வழங்காத அருட்கொடைகளையெல்லாம் உங்களுக்கு வழங்கினான்.”