×
المائدةவசனம் 27

அல்-முக்தஸர்

وَٱتْلُ عَلَيْهِمْ نَبَأَ ٱبْنَىْ ءَادَمَ بِٱلْحَقِّ إِذْ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ أَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ مِنَ ٱلْـَٔاخَرِ قَالَ لَأَقْتُلَنَّكَ ۖ قَالَ إِنَّمَا يَتَقَبَّلُ ٱللَّهُ مِنَ ٱلْمُتَّقِينَ ﴿٢٧﴾

தூதரே! பொறாமை மிகுந்த இந்த அநியாயக்கார யூதர்களிடம், ஆதமின் இரு மகன்களான காபீல், ஹாபீல் பற்றிய செய்தியை உண்மையுடன் எடுத்துரைப்பீராக. இருவரும் அல்லாஹ்விடம் ஒரு காணிக்கையை முன்வைத்த போது இறையச்சமுடைய ஹாபீலின் காணிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது. இறையச்சமற்ற காபீலின் காணிக்கை ஏற்றுக் கொள்ளப்படவில்லை. காபீல் பொறாமையில் ஹாபீலின் காணிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டதை வெறுத்தான். “ஹாபீலே, நான் உன்னை நிச்சயம் கொன்றுவிடுவேன்” என்று கூறினான். அதற்கு ஹாபீல், “அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி, அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சக்கூடியவர்களிடமிருந்தே அவன் ஏற்றுக்கொள்கிறான்” என்று கூறினார்.