அல்-முக்தஸர்
وَٱلسَّارِقُ وَٱلسَّارِقَةُ فَٱقْطَعُوٓا۟ أَيْدِيَهُمَا جَزَآءًۢ بِمَا كَسَبَا نَكَـٰلًا مِّنَ ٱللَّهِ ۗ وَٱللَّهُ عَزِيزٌ حَكِيمٌ ﴿٣٨﴾
ஆட்சியாளர்களே! மக்களின் செல்வங்களை உரிமையின்றி பறித்ததற்குக் கூலியாகவும் அல்லாஹ்வின் தண்டனையாகவும் திருடன் மற்றும் திருடியின் வலது கையை வெட்டிவிடுங்கள். இது அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் அச்சமூட்டலாக அமையும். அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவன். யாராலும் அவனை மிகைக்க முடியாது. தனது நிர்ணயத்திலும் சட்டமியற்றுவதிலும் அவன் ஞானம்மிக்கவன்.