×
المائدةவசனம் 46

அல்-முக்தஸர்

وَقَفَّيْنَا عَلَىٰٓ ءَاثَـٰرِهِم بِعِيسَى ٱبْنِ مَرْيَمَ مُصَدِّقًا لِّمَا بَيْنَ يَدَيْهِ مِنَ ٱلتَّوْرَىٰةِ ۖ وَءَاتَيْنَـٰهُ ٱلْإِنجِيلَ فِيهِ هُدًى وَنُورٌ وَمُصَدِّقًا لِّمَا بَيْنَ يَدَيْهِ مِنَ ٱلتَّوْرَىٰةِ وَهُدًى وَمَوْعِظَةً لِّلْمُتَّقِينَ ﴿٤٦﴾

இஸ்ராயீலின் மக்களிலுள்ள தூதர்களைத் தொடர்ந்து மர்யமின் மகன் ஈஸாவை தவ்ராத்திலுள்ளவற்றை நம்பியவராகவும் அதன்படி தீர்ப்பளிக்கக்கூடியவராகவும் நாம் அனுப்பினோம். சத்தியத்திற்கான வழிகாட்டலையும், சந்தேகங்களைப் போக்கக்கூடிய ஆதாரங்களையும், அவர்களின் பிரச்சினைகளை தீர்க்கக்கூடிய சட்டங்களையும் உள்ளடக்கிய இன்ஜீலை நாம் அவருக்கு வழங்கினோம். அது அதற்கு முன் இறங்கிய தவ்ராத்தின் சில சட்டங்களை மாத்திரம் மாற்றியமைத்தாலும் ஏனைய விடயங்களில் அதனுடன் உடன்படக்கூடியதாகவும் இருந்தது. நாம் அதனை வழிகாட்டியாகவும், தடை செய்யப்பட்ட பாவங்களில் ஈடுபடுவதைத் தடுக்கும் எச்சரிக்கையாகவும் ஆக்கினோம்.