×
المائدةவசனம் 49

அல்-முக்தஸர்

وَأَنِ ٱحْكُم بَيْنَهُم بِمَآ أَنزَلَ ٱللَّهُ وَلَا تَتَّبِعْ أَهْوَآءَهُمْ وَٱحْذَرْهُمْ أَن يَفْتِنُوكَ عَنۢ بَعْضِ مَآ أَنزَلَ ٱللَّهُ إِلَيْكَ ۖ فَإِن تَوَلَّوْا۟ فَٱعْلَمْ أَنَّمَا يُرِيدُ ٱللَّهُ أَن يُصِيبَهُم بِبَعْضِ ذُنُوبِهِمْ ۗ وَإِنَّ كَثِيرًا مِّنَ ٱلنَّاسِ لَفَـٰسِقُونَ ﴿٤٩﴾

தூதரே! அல்லாஹ் உமக்கு இறக்கியதன்படி அவர்களிடையே தீர்ப்பளிப்பீராக. மனஇச்சையைப் பின்பற்றியதால் தோன்றும் அவர்களின் கருத்துகளைப் பின்பற்றாதீர். அல்லாஹ் உமக்கு இறக்கிய சிலவற்றைவிட்டும் அவர்கள் உம்மை வழிகெடுத்துவிடுவதை விட்டும் எச்சரிக்கையாக இருப்பீராக. இந்த முயற்சியில் அவர்கள் கொஞ்சமும் சோர்வடைந்துவிட மாட்டார்கள். அல்லாஹ் உம்மீது இறக்கியதன் படி தீர்ப்புச் செய்வதை அவர்கள் புறக்கணித்தால், அல்லாஹ் அவர்களின் சில பாவங்களுக்குத் தண்டனையை இவ்வுலகிலும், அனைத்துப் பாவங்களுக்கான தண்டனையை மறுமையிலும் வழங்க விரும்புகிறான் என்பதை அறிந்துகொள்வீராக. மனிதர்களில் பெரும்பாலோர் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிய மறுப்பவர்களாகவே இருக்கிறார்கள்.