அல்-முக்தஸர்
قُلْ هَلْ أُنَبِّئُكُم بِشَرٍّ مِّن ذَٰلِكَ مَثُوبَةً عِندَ ٱللَّهِ ۚ مَن لَّعَنَهُ ٱللَّهُ وَغَضِبَ عَلَيْهِ وَجَعَلَ مِنْهُمُ ٱلْقِرَدَةَ وَٱلْخَنَازِيرَ وَعَبَدَ ٱلطَّـٰغُوتَ ۚ أُو۟لَـٰٓئِكَ شَرٌّ مَّكَانًا وَأَضَلُّ عَن سَوَآءِ ٱلسَّبِيلِ ﴿٦٠﴾
தூதரே! நீர் கூறுவீராக: “இவர்களை விட குறை கூறுவதற்கு தகுதியானவர்களையும் கடுமையான வேதனைக்கு உரியவர்களையும் நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? அல்லாஹ் தனது அருளிலிருந்து தூரமாக்கி, குரங்குகளாவும் பன்றிகளாகவும் உருமாற்றிய உங்களின் முன்னோர்கள்தாம். அவர்களில் சிலரை அல்லாஹ் தாகூத்தை வணங்குபவர்களாகவும் மாற்றினான். அல்லாஹ்வைத் தவிர மனமுவந்து வணங்கப்படக்கூடியவை அனைத்தும் தாகூத்களே. இவர்கள்தாம் மறுமைநாளில் மோசமான இடத்தைப் பெற்றவர்களும் நேரான பாதையை விட்டும் மிகவும் வழிகெட்டவர்களும் ஆவார்கள்.