×
المائدةவசனம் 64

அல்-முக்தஸர்

وَقَالَتِ ٱلْيَهُودُ يَدُ ٱللَّهِ مَغْلُولَةٌ ۚ غُلَّتْ أَيْدِيهِمْ وَلُعِنُوا۟ بِمَا قَالُوا۟ ۘ بَلْ يَدَاهُ مَبْسُوطَتَانِ يُنفِقُ كَيْفَ يَشَآءُ ۚ وَلَيَزِيدَنَّ كَثِيرًا مِّنْهُم مَّآ أُنزِلَ إِلَيْكَ مِن رَّبِّكَ طُغْيَـٰنًا وَكُفْرًا ۚ وَأَلْقَيْنَا بَيْنَهُمُ ٱلْعَدَٰوَةَ وَٱلْبَغْضَآءَ إِلَىٰ يَوْمِ ٱلْقِيَـٰمَةِ ۚ كُلَّمَآ أَوْقَدُوا۟ نَارًا لِّلْحَرْبِ أَطْفَأَهَا ٱللَّهُ ۚ وَيَسْعَوْنَ فِى ٱلْأَرْضِ فَسَادًا ۚ وَٱللَّهُ لَا يُحِبُّ ٱلْمُفْسِدِينَ ﴿٦٤﴾

யூதர்கள் தங்களுக்கு பஞ்சமும் கஷ்டமும் ஏற்பட்டபோது, “நலவு மற்றும் நன்கொடையை விட்டும் அல்லாஹ்வின் கை தடுக்கப்பட்டுள்ளது. தன்னிடத்தில் இருப்பதை எம்மை விட்டும் அவன் தடுத்துக்கொண்டான்.” எனக் கூறினார்கள். அறிந்துகொள்ளுங்கள், அவர்களின் கைகள்தான் நற்காரியத்தையும், நன்கொடையையும் விட்டுத் தடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறியதனால் அல்லாஹ்வின் அருளிலிருந்து விரட்டப்பட்டுவிட்டார்கள். அல்லாஹ்வின் கரங்கள் நலவையும் நன்கொடையையும் அள்ளிவழங்குபவை. அவன் தான் நாடியவாறு செலவு செய்கிறான். அவன் அள்ளியும் கொடுக்கிறான் குறைத்தும் கொடுக்கிறான். அவனைத் தடுப்பவரோ நிர்ப்பந்திப்பவரோ யாரும் இல்லை. தூதரே! அல்லாஹ் உம்மீது இறக்கியது யூதர்களுக்கு - அவர்களின் பொறாமையினால் - வரம்புமீறலையும் நிராகரிப்பையுமே அதிகப்படுத்தும். நாம் அவர்களிடையே பகைமையையும் குரோதத்தையும் ஏற்படுத்திவிட்டோம். அவர்கள் ஒன்றிணைந்து போருக்கான முன்னேற்பாடுகளை செய்யும் போதெல்லாம் அல்லது போர்மூட்டுவதற்கான சூழ்ச்சிகளில் ஈடுபடும் போதெல்லாம் நாம் அவர்களின் ஒன்றிணைவை சிதைத்து பலத்தைப் போக்கிவிடுகின்றோம். அவர்கள் இஸ்லாத்தை அழிப்பதற்கான பணிகளிலும் சூழ்ச்சிகளிலும் ஈடுபட்டு பூமியில் குழப்பம் விளைக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டேயிருப்பார்கள். குழப்பக்காரர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை.