×
المائدةவசனம் 88

அல்-முக்தஸர்

وَكُلُوا۟ مِمَّا رَزَقَكُمُ ٱللَّهُ حَلَـٰلًا طَيِّبًا ۚ وَٱتَّقُوا۟ ٱللَّهَ ٱلَّذِىٓ أَنتُم بِهِۦ مُؤْمِنُونَ ﴿٨٨﴾

அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய அனுமதிக்கப்பட்ட தூய்மையான உணவுகளை உண்ணுங்கள். அபகரிக்கப்பட்ட அல்லது அறுவறுக்கத்தக்கது போன்ற தடைசெய்யப்பட்டவற்றை உண்ணாதீர்கள். அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சிக் கொள்ளுங்கள். அவன் மீதுதான் நீங்கள் நம்பிக்கைகொண்டுள்ளீர்கள். அவன் மீதான உங்களின் நம்பிக்கை அவனை அஞ்சுவதைக் கட்டாயமாக்கிவிடுகிறது.