அல்-முக்தஸர்
وَأَطِيعُوا۟ ٱللَّهَ وَأَطِيعُوا۟ ٱلرَّسُولَ وَٱحْذَرُوا۟ ۚ فَإِن تَوَلَّيْتُمْ فَٱعْلَمُوٓا۟ أَنَّمَا عَلَىٰ رَسُولِنَا ٱلْبَلَـٰغُ ٱلْمُبِينُ ﴿٩٢﴾
அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அல்லாஹ்வுக்கும் கட்டுப்படுங்கள். அவனுடைய தூதருக்கும் கட்டுப்படுங்கள். மாறுசெய்வதிலிருந்து விலகியிருங்கள். நீங்கள் இதனைப் புறக்கணித்தால் அறிந்துகொள்ளுங்கள், அல்லாஹ்வின் கட்டளைகளை எடுத்துரைப்பதுதான் நம் தூதர் மீதுள்ள கடமையாகும். அவர் எடுத்துரைத்துவிட்டார். நீங்கள் நேர்வழி அடைந்தால் அது உங்களுக்குத்தான் நல்லது. நீங்கள் தீங்கிழைத்தால் அதன் கேடு உங்களையே சாரும்.