×
المائدةவசனம் 96

அல்-முக்தஸர்

أُحِلَّ لَكُمْ صَيْدُ ٱلْبَحْرِ وَطَعَامُهُۥ مَتَـٰعًا لَّكُمْ وَلِلسَّيَّارَةِ ۖ وَحُرِّمَ عَلَيْكُمْ صَيْدُ ٱلْبَرِّ مَا دُمْتُمْ حُرُمًا ۗ وَٱتَّقُوا۟ ٱللَّهَ ٱلَّذِىٓ إِلَيْهِ تُحْشَرُونَ ﴿٩٦﴾

நீரிலுள்ள பிராணிகளை வேட்டையாடுவதும் கடல் உங்களுக்காக கரை ஒதுக்கிவிடும் - உயிருள்ள அல்லது இறந்த - பிராணிகளும் உங்களில் ஊரில் இருப்பவர்களுக்கும் பயணிகளாக இருப்பவர்களுக்கும் பயன்பெறும் பொருட்டு அனுமதிக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஹஜ் அல்லது உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்த நிலையில் இருக்கும் வரை நிலத்தில் வேட்டையாடுவது உங்களுக்குத் தடைசெய்யப்பட்டுள்ளது. அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சிக் கொள்ளுங்கள். மறுமைநாளில் நீங்கள் அவன் பக்கமே திரும்ப வேண்டும். உங்களின் செயல்களுக்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான்.