×
الأنعامவசனம் 104

அல்-முக்தஸர்

قَدْ جَآءَكُم بَصَآئِرُ مِن رَّبِّكُمْ ۖ فَمَنْ أَبْصَرَ فَلِنَفْسِهِۦ ۖ وَمَنْ عَمِىَ فَعَلَيْهَا ۚ وَمَآ أَنَا۠ عَلَيْكُم بِحَفِيظٍ ﴿١٠٤﴾

மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து தெளிவான ஆதாரங்களும் சான்றுகளும் உங்களிடம் வந்துவிட்டன. யார் அவற்றைப் புரிந்து கீழ்ப்படிந்தாரோ அதன் பயன் அவருக்கே. யார் அவற்றைக் கண்டுகொள்ளாமலும் புரியாமலும் அவற்றுக்குக் கீழ்ப்படியவில்லையோ அதன் தீங்கு அவருக்கே. உங்களின் செயல்களைக் கணக்கிடுவதற்கு நான் உங்கள் மீது கண்காணிப்பாளன் அல்லன். என் இறைவனிடமிருந்து வந்த தூதராவேன். அவனே உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கின்றான்.