×
الأنعامவசனம் 133

அல்-முக்தஸர்

وَرَبُّكَ ٱلْغَنِىُّ ذُو ٱلرَّحْمَةِ ۚ إِن يَشَأْ يُذْهِبْكُمْ وَيَسْتَخْلِفْ مِنۢ بَعْدِكُم مَّا يَشَآءُ كَمَآ أَنشَأَكُم مِّن ذُرِّيَّةِ قَوْمٍ ءَاخَرِينَ ﴿١٣٣﴾

தூதரே! தன் அடியார்களை விட்டும் தேவையற்றவனே உம் இறைவன். அவர்களின் பக்கமோ அவர்களின் வணக்கத்தின் பக்கமோ அவனுக்கு எத்தேவையுமில்லை. அவர்களது நிராகரிப்பு அவனுக்கு எந்த இழப்பையும் ஏற்படுத்தி விடப்போவதில்லை. அவன் தன் அடியார்களைவிட்டும் தேவையற்றவனாக இருந்தும்கூட அவர்களின் விஷயத்தில் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான். பாவம் புரியும் அடியார்களே! அவன் உங்களை அழிக்க நாடினால் வேதனையைக் கொண்டு உங்கள் அனைவரையும் பூண்டோடு அழித்துவிட்டு அதன் பின் தன் மீது நம்பிக்கைகொள்ளும், தனக்குக் கட்டுப்படும் மக்களை ஏற்படுத்துவான், உங்களுக்கு முன்னர் வாழ்ந்த வேறொரு சமூகத்தின் வழித்தோன்றலிலிருந்து உங்களைப் படைத்தது போன்று.