அல்-முக்தஸர்
وَجَعَلُوا۟ لِلَّهِ مِمَّا ذَرَأَ مِنَ ٱلْحَرْثِ وَٱلْأَنْعَـٰمِ نَصِيبًا فَقَالُوا۟ هَـٰذَا لِلَّهِ بِزَعْمِهِمْ وَهَـٰذَا لِشُرَكَآئِنَا ۖ فَمَا كَانَ لِشُرَكَآئِهِمْ فَلَا يَصِلُ إِلَى ٱللَّهِ ۖ وَمَا كَانَ لِلَّهِ فَهُوَ يَصِلُ إِلَىٰ شُرَكَآئِهِمْ ۗ سَآءَ مَا يَحْكُمُونَ ﴿١٣٦﴾
அல்லாஹ் படைத்த பயிர்களிலும் கால்நடைகளிலும் அல்லாஹ்வுக்கு ஒரு பங்கை ஒதுக்கி, அவை அல்லாஹ்வுக்கு உரியவை என்றும் இன்னுமொரு பங்கை தங்கள் சிலைகளுக்கும் நினைவுச் சின்னங்களுக்கும் உரியவை என்றும் இணைவைப்பாளர்கள் புது வழிமுறையை உருவாக்கினார்கள். தாம் இணைவைப்போருக்கு ஒதுக்கியது அல்லாஹ் செலவளிக்குமாறு கூறிய ஏழைகளுக்கோ வறியவர்களுக்கோ சென்றடையாதாம். அல்லாஹ்வுக்காக ஒதுக்கியது தங்களின் சிலைகளைச் சென்றடையுமாம். அவைகளின் நலன்களுக்கு செலவளிக்கப்படுகின்றன. அவர்களின் தீர்ப்பும் பங்கீடும் எத்துணை மோசமானது!