×
الأنعامவசனம் 14

அல்-முக்தஸர்

قُلْ أَغَيْرَ ٱللَّهِ أَتَّخِذُ وَلِيًّا فَاطِرِ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ وَهُوَ يُطْعِمُ وَلَا يُطْعَمُ ۗ قُلْ إِنِّىٓ أُمِرْتُ أَنْ أَكُونَ أَوَّلَ مَنْ أَسْلَمَ ۖ وَلَا تَكُونَنَّ مِنَ ٱلْمُشْرِكِينَ ﴿١٤﴾

தூதரே! அல்லாஹ்வுடன் சிலைகளையும் மற்றவைகளையும் வணங்கும் இணைவைப்பாளர்களிடம் கூறுவீராக: “நான் அல்லாஹ் அல்லாதவர்களை நேசம் பாராட்டும், உதவி பெறும் உதவியாளர்களாக ஆக்கிக் கொள்வதை கற்பனையாவது செய்யலாமா? அவன்தான் வானங்களையும் பூமியையும் முன்மாதிரியின்றி படைத்தான். அவன் தன் அடியார்களில் தான் நாடியோருக்கு உணவளிக்கிறான். அவனது அடியார்களில் யாரும் அவனுக்கு உணவளிப்பதில்லை. அவன் தன் அடியார்களை விட்டும் தேவையற்றவன். அடியார்கள் அவன்பால் தேவையுடையவர்கள்.” தூதரே! நீர் கூறுவீராக: “இந்த சமூகத்தில் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டவர்களில் முதலாமவனாக இருக்க வேண்டும் என்று என் இறைவன் எனக்குக் கட்டளையிட்டுள்ளான். அவனுடன் மற்றவர்களை இணையாக்குபவர்களுடன் நான் சேர்ந்துவிடுவதை விட்டும் என்னைத் தடுத்துள்ளான்.