×
الأنعامவசனம் 147

அல்-முக்தஸர்

فَإِن كَذَّبُوكَ فَقُل رَّبُّكُمْ ذُو رَحْمَةٍ وَٰسِعَةٍ وَلَا يُرَدُّ بَأْسُهُۥ عَنِ ٱلْقَوْمِ ٱلْمُجْرِمِينَ ﴿١٤٧﴾

தூதரே! உம் இறைவனிடமிருந்து நீர் கொண்டு வந்ததை அவர்கள் உண்மைப்படுத்தாமல் உம்மைப் பொய்யர் என்று கூறினால் ஆர்வமூட்டும் விதமாக அவர்களிடம்: “உங்களின் இறைவன் கருணை காட்டுவதில் தாராளமானவன். உங்களை அவன் உடனுக்குடன் தண்டிக்காமல் அவகாசம் அளிப்பதும் அவனது கருணையின் வெளிப்பாடுதான், எனவும், எச்சரிக்கும் விதமாக அவர்களிடம்: பாவங்களிலும் குற்றங்களிலும் ஈடுபட்டவர்களை விட்டும் அவனுடைய தண்டனை திருப்பப்படாது.” எனவும் கூறுவீராக.