×
الأنعامவசனம் 150

அல்-முக்தஸர்

قُلْ هَلُمَّ شُهَدَآءَكُمُ ٱلَّذِينَ يَشْهَدُونَ أَنَّ ٱللَّهَ حَرَّمَ هَـٰذَا ۖ فَإِن شَهِدُوا۟ فَلَا تَشْهَدْ مَعَهُمْ ۚ وَلَا تَتَّبِعْ أَهْوَآءَ ٱلَّذِينَ كَذَّبُوا۟ بِـَٔايَـٰتِنَا وَٱلَّذِينَ لَا يُؤْمِنُونَ بِٱلْـَٔاخِرَةِ وَهُم بِرَبِّهِمْ يَعْدِلُونَ ﴿١٥٠﴾

அல்லாஹ் அனுமதித்ததை தடைசெய்து ‘அல்லாஹ்தான் தடைசெய்தான்’ என்று வாதிடும் இந்த இணைவைப்பாளர்களிடம் நீர் கூறுவீராக: “அல்லாஹ்தான் இவற்றை தடைசெய்தான் என்பதற்கான சாட்சிகளைக் கொண்டு வாருங்கள்.” அல்லாஹ்தான் தடைசெய்தான் என்று அறிவில்லாமல் அவர்கள் சாட்சிகூறினால் அவர்களின் சாட்சியத்தை நீர் உண்மைப்படுத்தாதீர். ஏனெனில் அது பொய்சாட்சியாகும். தங்களின் மனஇச்சையின்படி செயல்படுபவர்களின் மனஇச்சையை நீர் பின்பற்றாதீர். அல்லாஹ் அனுமதித்ததை அவர்கள் தடைசெய்த போது நம்முடைய வசனங்களை மறுத்துவிட்டனர். மறுமை நாளின் மீது நம்பிக்கைகொள்ளாதவர்களை நீர் பின்பற்றாதீர். அவர்கள் தங்கள் இறைவனுக்கு இணைவைத்து மற்றவர்களை அவனுடன் சமமாக்குகின்றனர். தங்கள் இறைவனுடன் இவ்வாறு நடந்துகொள்ளும் இவர்களை எவ்வாறு பின்பற்றுவது?