அல்-முக்தஸர்
وَلَا تَقْرَبُوا۟ مَالَ ٱلْيَتِيمِ إِلَّا بِٱلَّتِى هِىَ أَحْسَنُ حَتَّىٰ يَبْلُغَ أَشُدَّهُۥ ۖ وَأَوْفُوا۟ ٱلْكَيْلَ وَٱلْمِيزَانَ بِٱلْقِسْطِ ۖ لَا نُكَلِّفُ نَفْسًا إِلَّا وُسْعَهَا ۖ وَإِذَا قُلْتُمْ فَٱعْدِلُوا۟ وَلَوْ كَانَ ذَا قُرْبَىٰ ۖ وَبِعَهْدِ ٱللَّهِ أَوْفُوا۟ ۚ ذَٰلِكُمْ وَصَّىٰكُم بِهِۦ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ ﴿١٥٢﴾
அநாதைகள் - பருவமடைவதற்கு முன்பே தந்தையை இழந்தவர்கள் - பக்குவ வயதை அடையும் வரை அவர்களின் செல்வங்களை நெருங்குவதையும் அல்லாஹ் தடைசெய்துள்ளான். ஆயினும் அவர்களுக்குப் பயனளிக்கும், அவர்களது செல்வத்தை வளர்க்கும் விதத்தில் அவர்களின் செல்வங்களை நீங்கள் நெருங்கலாம். அளவையிலும் நிறுவையிலும் மோசடி செய்வதையும் தடைசெய்துள்ளான். கொடுக்கல் வாங்கலில், விற்றல் வாங்கலில் நீதியாக நடந்து கொள்வதே உங்கள் மீது கடமையாகும். ஒருவர் மீது அவர் தாங்கும் அளவுக்கே நாம் பொறுப்பு சாட்டுவோம். அளவு, நிறுவை மற்றும் ஏனையவைகளில் தவிர்க்க முடியாத கூடுதல் குறைவு ஏற்படுவது குற்றமில்லை. நீங்கள் ஒரு தகவல் அல்லது சாட்சி கூறினால் உண்மைக்குப் புறம்பானதைக் கூறுவதையும் அவன் உங்களுக்குத் தடைசெய்துள்ளான்.எந்தவொரு உறவினருக்கோ, நண்பருக்கோ பாரபட்சம் காட்டக்கூடாது. அல்லாஹ்விடம் செய்த அல்லது அவனது பெயரினால் செய்த ஒப்பந்தங்களை முறித்துவிடுவதையும் அவன் உங்களுக்குத் தடைசெய்துள்ளான். அவற்றை முழுமையாக நிறைவேற்றுவதே உங்கள் மீது கடமையாகும். உங்களது செயலின் விளைவுகளை நீங்கள் நினைவுகூர வேண்டும் என்பதற்காக மேற்கூறப்பட்டவற்றைக் கொண்டு அல்லாஹ் உங்களுக்கு உறுதியான கட்டளையிடுகிறான்.