×
الأنعامவசனம் 157

அல்-முக்தஸர்

أَوْ تَقُولُوا۟ لَوْ أَنَّآ أُنزِلَ عَلَيْنَا ٱلْكِتَـٰبُ لَكُنَّآ أَهْدَىٰ مِنْهُمْ ۚ فَقَدْ جَآءَكُم بَيِّنَةٌ مِّن رَّبِّكُمْ وَهُدًى وَرَحْمَةٌ ۚ فَمَنْ أَظْلَمُ مِمَّن كَذَّبَ بِـَٔايَـٰتِ ٱللَّهِ وَصَدَفَ عَنْهَا ۗ سَنَجْزِى ٱلَّذِينَ يَصْدِفُونَ عَنْ ءَايَـٰتِنَا سُوٓءَ ٱلْعَذَابِ بِمَا كَانُوا۟ يَصْدِفُونَ ﴿١٥٧﴾

யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் மீது ஒரு வேதம் இறக்கப்பட்டது போன்று எங்கள் மீதும் ஒரு வேதம் இறக்கப்பட்டிருந்தால் நாங்களும் அவர்களை விட உறுதியாக இருந்திருப்போம் என்று நீங்கள் கூறாமல் இருப்பதற்காகவும்தான். உங்களின் தூதர் முஹம்மது மீது உங்களின் மொழியிலேயே ஒரு வேதத்தை அல்லாஹ் இறக்கிவிட்டான். அது தெளிவான ஆதாரமாகவும் சத்தியத்தின்பால் வழிகாட்டக்கூடியதாகவும் இந்த சமூகத்திற்கு அருளாகவும் இருக்கின்றது. எனவே பலவீனமான சாக்குப் போக்குகளையும் தவறான காரணங்களையும் கூறாதீர்கள். அல்லாஹ்வின் வசனங்களைப் புறக்கணித்து பொய்யெனக் கூறுபவனைவிட மிகப் பெரிய அநியாயக்காரன் வேறு யாருமில்லை. நம்முடைய வசனங்களைப் புறக்கணித்ததற்குக் கூலியாக அவர்களை நரக நெருப்பில் நுழைத்து கடுமையாகத் தண்டிப்போம்.