அல்-முக்தஸர்
وَمِنْهُم مَّن يَسْتَمِعُ إِلَيْكَ ۖ وَجَعَلْنَا عَلَىٰ قُلُوبِهِمْ أَكِنَّةً أَن يَفْقَهُوهُ وَفِىٓ ءَاذَانِهِمْ وَقْرًا ۚ وَإِن يَرَوْا۟ كُلَّ ءَايَةٍ لَّا يُؤْمِنُوا۟ بِهَا ۚ حَتَّىٰٓ إِذَا جَآءُوكَ يُجَـٰدِلُونَكَ يَقُولُ ٱلَّذِينَ كَفَرُوٓا۟ إِنْ هَـٰذَآ إِلَّآ أَسَـٰطِيرُ ٱلْأَوَّلِينَ ﴿٢٥﴾
தூதரே! நீர் குர்ஆன் ஓதினால் இணைவைப்பாளர்களில் சிலர் உம் பக்கம் காதுகொடுத்துக் கேட்கிறார்கள். ஆயினும் அவர்கள் கேட்பவை அவர்களுக்கு பயனடைவதில்லை. அவர்களின் பிடிவாதம் மற்றும் புறக்கணிப்பினால் குர்ஆனை புரிந்துகொள்ள முடியாதவாறு அவர்களின் உள்ளங்களில் திரையை ஏற்படுத்தியுள்ளோம். அவர்களின் காதுகளில் அடைப்பை ஏற்படுத்தியுள்ளோம். அவர்களால் பயனுள்ள விஷயங்களைச் செவியுற முடியாது. எவ்வளவுதான் அவர்கள் தெளிவான ஆதாரங்களையும் சான்றுகளையும் கண்டாலும் அவர்கள் நம்பிக்கைகொள்ள மாட்டார்கள். எந்தளவுக்கென்றால் அவர்கள் உம்மிடம் அசத்தியத்தைக்கொண்டு வாதிட வரும்போது, “முந்தைய வேதங்களிலிருந்தே நீர் இந்த விஷயங்களையெல்லாம் கொண்டுவந்தீர்” என்று அவர்கள் கூறுவார்கள்.