×
الأنعامவசனம் 32

அல்-முக்தஸர்

وَمَا ٱلْحَيَوٰةُ ٱلدُّنْيَآ إِلَّا لَعِبٌ وَلَهْوٌ ۖ وَلَلدَّارُ ٱلْـَٔاخِرَةُ خَيْرٌ لِّلَّذِينَ يَتَّقُونَ ۗ أَفَلَا تَعْقِلُونَ ﴿٣٢﴾

நீங்கள் ஆசைகொள்ளும் இவ்வுலக வாழ்க்கை அல்லாஹ்வைத் திருப்தியடைச் செய்யும் காரியங்களைச் செய்யாதவர்களுக்கு விளையாட்டும் ஏமாற்றமுமேயாகும். இறைநம்பிக்கை, வணக்கவழிபாடு ஆகிய அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி, இணைவைப்பு, பாவம் ஆகிய அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சக்கூடியவர்களுக்கு மறுமையின் வீடுதான் சிறந்ததாகும். இணைவைப்பாளர்களே, நீங்கள் இதனைப் புரிந்துகொண்டு அவன் மீது நம்பிக்கைகொண்டு நற்செயல்புரிய மாட்டீர்களா?