×
الأنعامவசனம் 37

அல்-முக்தஸர்

وَقَالُوا۟ لَوْلَا نُزِّلَ عَلَيْهِ ءَايَةٌ مِّن رَّبِّهِۦ ۚ قُلْ إِنَّ ٱللَّهَ قَادِرٌ عَلَىٰٓ أَن يُنَزِّلَ ءَايَةً وَلَـٰكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ ﴿٣٧﴾

“முஹம்மதின் நம்பகத்தன்மையை நிரூபிக்கக்கூடிய வழக்கத்திற்கு மாறான ஏதேனும் ஒரு ஆதாரம் அவருடைய இறைவனிடமிருந்து அவருக்கு இறக்கப்பட்டிருக்கக்கூடாதா?” என்று இணைவைப்பாளர்கள் வீம்பாகக் கேட்கிறார்கள். தூதரே! நீர் கூறுவீராக, “அவர்கள் விரும்புவது போன்று ஓர் அத்தாட்சியை இறக்குவதற்கு அல்லாஹ் சக்தியுடையவன்தான். ஆனால் இவ்வாறு கேட்கும் இணைவைப்பாளர்களில் பெரும்பாலோர் அல்லாஹ் தன் ஞானத்தின் பிரகாரமே ஆதாரங்களை இறக்குவான் அவர்களது வேண்டுதல்களுக்கேற்பவல்ல, என்பதை அறியமாட்டார்கள். அவன் இறக்கியும் அவர்கள் நம்பிக்கைகொள்ளவில்லையென்றால் அவன் அவர்களை அழித்துவிடுவான்.