அல்-முக்தஸர்
فَلَوْلَآ إِذْ جَآءَهُم بَأْسُنَا تَضَرَّعُوا۟ وَلَـٰكِن قَسَتْ قُلُوبُهُمْ وَزَيَّنَ لَهُمُ ٱلشَّيْطَـٰنُ مَا كَانُوا۟ يَعْمَلُونَ ﴿٤٣﴾
அவர்களுக்கு நமது சோதனை வந்தபோது, அது நீங்கும் பொருட்டு, அல்லாஹ்வுக்கு அவர்கள் கட்டுப்பட்டு அடிபணிந்திருந்தால் அவர்கள் மீது நாம் கருணை காட்டியிருப்போம். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. மாறாக அறிவுரை பெறாதவாறு அவர்களின் உள்ளங்கள் இறுகிவிட்டன. அவர்கள் செய்த நிராகரிப்பான, பாவமான செயல்களை ஷைத்தான் அவர்களுக்கு அலங்கரித்துக் காட்டினான். அதனால் அவர்கள் தங்களின் பாவங்களில் நிலைத்திருந்தார்கள்.