×
الأنعامவசனம் 50

அல்-முக்தஸர்

قُل لَّآ أَقُولُ لَكُمْ عِندِى خَزَآئِنُ ٱللَّهِ وَلَآ أَعْلَمُ ٱلْغَيْبَ وَلَآ أَقُولُ لَكُمْ إِنِّى مَلَكٌ ۖ إِنْ أَتَّبِعُ إِلَّا مَا يُوحَىٰٓ إِلَىَّ ۚ قُلْ هَلْ يَسْتَوِى ٱلْأَعْمَىٰ وَٱلْبَصِيرُ ۚ أَفَلَا تَتَفَكَّرُونَ ﴿٥٠﴾

தூதரே! இந்த இணைவைப்பாளர்களிடம் கூறுவீராக: “நான் விரும்பியபடி செலவு செய்யும் விதத்தில் வாழ்வாதாரத்தின் அல்லாஹ்வின் பொக்கிஷங்கள் என்னிடம் இருப்பதாக நான் உங்களிடம் கூற மாட்டேன். அல்லாஹ் எனக்கு அறிவித்த வஹியைத் தவிர மறைவானவற்றை நான் அறிவேன் என்றோ நான் வானவர் என்றோ கூறமாட்டேன். நான் அல்லாஹ்வின் தூதராவேன். அவன் எனக்கு வஹியாக அறிவிப்பதையே பின்பற்றுகிறேன். என்னிடம் இல்லாதவற்றை இருப்பதாக வாதிடமாட்டேன்.” தூதரே! நீர் அவர்களிடம் கேட்பீராக: “சத்தியத்தைக் கண்டுகொள்ளாத நிராகரிப்பாளனும் சத்தியத்தைக் கண்டுகொண்ட நம்பிக்கையாளனும் சமமாவார்களா? இணைவைப்பாளர்களே! உங்களைச் சுற்றியிருக்கும் சான்றுகளை சிந்தித்துப் பார்க்க மாட்டீர்களா?