×
الأنعامவசனம் 65

அல்-முக்தஸர்

قُلْ هُوَ ٱلْقَادِرُ عَلَىٰٓ أَن يَبْعَثَ عَلَيْكُمْ عَذَابًا مِّن فَوْقِكُمْ أَوْ مِن تَحْتِ أَرْجُلِكُمْ أَوْ يَلْبِسَكُمْ شِيَعًا وَيُذِيقَ بَعْضَكُم بَأْسَ بَعْضٍ ۗ ٱنظُرْ كَيْفَ نُصَرِّفُ ٱلْـَٔايَـٰتِ لَعَلَّهُمْ يَفْقَهُونَ ﴿٦٥﴾

தூதரே! அவர்களிடம் நீர் கூறுவீராக: “உங்களுக்கு மேலிருந்து - கல், மின்னல், வெள்ளம் போன்ற - வேதனையை அனுப்பவோ உங்களுக்குக் கீழிருந்து - பூகம்பம், பூமியில் புதையச் செய்தல் போன்ற - வேதனையை ஏற்படுத்தவோ அல்லது ஒவ்வொருவரும் தனது மனஇச்சையைப் பின்பற்றி ஒருவருக்கொருவர் மோதிக்கொள்ளும் அளவு உள்ளங்களிடையே பிரிவினை ஏற்படுத்தவோ அல்லாஹ் சக்தியுடையவன். தூதரே! நீர் கொண்டு வந்ததை சத்தியம் என்றும் தங்களிடமுள்ளதை அசத்தியம் என்றும் அவர்கள் அறிந்துகொள்வதற்காக, நாம் எவ்வாறு பல்வேறு வகையான ஆதாரங்களைத் தெளிவுபடுத்துகிறோம் என்பதைப் பாரும்.